தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கீழடி அகழாய்வு வெளியீடுகள் தொடரணும்' - இ.கம்யூ பொதுச்செயலாளர் டி. ராஜா பேட்டி

மதுரை: கீழடி அகழாய்வுப் பணிகளில் மூலம் புதிய தகவல்கள் கிடைக்கப்பெற்று வருகிறது. மேலும் கீழடி அகழாய்வு வெளியீடுகள் தொடர வேண்டும் என மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா கூறினார்.

By

Published : Sep 21, 2019, 1:56 PM IST

கீழடி அகழாய்வு வெளியீடுகள் தொடரவேண்டும் என மதுரையில் டி.ராஜா பேட்டியளித்துள்ளார்

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா கூறும்போது, "கீழடி அகழாய்வுப் பணிகள் மூலம் புதிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுவருகிறது. கலாசாரம், நாகரிகம் பற்றிய தமிழ் மொழியின் தொன்மை, பண்டைய நாகரிகம் ஆய்வுத் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. எனவே கீழடி அகழாய்வு பணிகள் குறித்த வெளியீடுகள் தொடர வேண்டும்.

கீழடி அகழாய்வு வெளியீடுகள் தொடர வேண்டும் - மதுரையில் டி. ராஜா பேட்டி

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமுதலாளிகளுக்கு சலுகைகளை வாரி இறைத்துவருகிறார். நேற்றைக்கு கூட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏதுவாக வரியை குறைத்துள்ளனர். இதனால் கார்ப்பரேட் முதலாளிகள் ஆனந்தக் கூத்தாடிவருகின்றனர். இந்தியாவின் அடிப்படை மோடி அரசால் தகர்க்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்புத் தகுதி 370 நாடு முழுவதும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. உள் துறை அமைச்சர் அமித் ஷா இந்தி குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அவர் தற்போது அவ்வாறு கூறவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு, ஒரே கலாசாரம், ஒரே மொழி கொண்ட நாடாக இந்தியாவை மாற்றுவது சாத்தியமே இல்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதனை எதிர்ப்பதோடு இந்த முயற்சியை முறியடிப்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: கீழடி அகழாய்வில் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

ABOUT THE AUTHOR

...view details