தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரமாண்ட மஞ்சப்பை அணிந்து 'மீண்டும் மஞ்சப்பை' விழிப்புணர்வு: மதுரையில் ருசிகரம்

தமிழ்நாடு அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பிரமாண்ட மஞ்சப்பையை உடலில் அணிந்து சமூக ஆர்வலர்கள் நூதன விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டனர்.

'மீண்டும் மஞ்சப்பை' விழிப்புணர்வு
'மீண்டும் மஞ்சப்பை' விழிப்புணர்வு

By

Published : Mar 21, 2022, 6:25 PM IST

மதுரை:கடல் வாழ் உயிரினங்கள், சுற்றுச்சூழலுக்கு பிளாஸ்டிக் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகளை கருத்தில் கொண்டு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதித்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஆனாலும், பல வணிக நிறுவனங்கள் இன்னும் பிளாஸ்டிக் பைகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

'மீண்டும் மஞ்சப்பை' விழிப்புணர்வு

இதனையடுத்து, 'மீண்டும் மஞ்சப்பை' திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், முதலமைச்சர் ஸ்டாலினின் நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், மக்கள் மீண்டும் மஞ்சள் பையைப் பயன்படுத்த வலியுறுத்தும்விதமாகவும் இன்று (மார்ச் 21) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைகை நதி மக்கள் இயக்கம் சார்பாக, சமூக ஆர்வலர்கள் பிரமாண்ட மஞ்சள் பையை, உடலில் அணிந்து நூதன விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டனர்.

'மீண்டும் மஞ்சப்பை' விழிப்புணர்வு

அப்போது, பிளாஸ்டிக்கின் தீமைகளைக் கருதி அதனை ஒழிக்க ஒன்றிய - மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அரசுகளின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக மக்கள் மஞ்சப் பைகளை பயன்படுத்த வேண்டும் என இவ்வியக்கத்தின் சார்பில் சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர்.

இதையும் படிங்க: ஈரோடு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details