தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலியல் வன்கொடுமைகளை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும்: நீதிமன்றத்தில் முறையீடு

மதுரை: கடந்த 8 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை உள்பட சிறுமிகள் சிறார்கள் மீதான அனைத்து வழக்குகளையும் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்து விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது..

மதுரை
மதுரை

By

Published : Oct 12, 2020, 12:32 PM IST

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் அருள் என்பவர் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில், "தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. போக்சோ சட்டம் முறையாக நடைமுறைப் படுத்தப்படுகிறதா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

அது முறையாக நடைமுறைப்படுத்தப்படாததே தொடர்ச்சியாக சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கக் காரணம் எனவும் கருதப்படுகிறது.

ஆகவே, கடந்த 8 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமிகள் சிறார்கள் மீதான அனைத்து வழக்குகளையும் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்" என முறையிட்டார்.

இதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details