தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு ஆர்எஸ்எஸ் பதில் அளிக்கவில்லை" - திருமாவளவன்

உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் ஆர்எஸ்எஸ் திணறி பின் வாங்கியது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

By

Published : Nov 7, 2022, 8:29 AM IST

rss manusmriti  thirumavalavan  rss  High Court  உயர் நீதிமன்றம்  திருமாவளவன்  ஆர்எஸ்எஸ்
திருமாவளவன்

மதுரை :விமான நிலையத்தில் செய்தியாளர்களை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளிடம் பேசினார். அப்போது, “ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மனுஸ்மிருதி புத்தகத்தை பொதுமக்களுக்கு இன்று விநியோகம் செய்தோம். அம்பேத்கர், பெரியார் தொடங்கி திராவிட கழகத்தினரும் மனுஸ்மிருதி புத்தகத்தை கொளுத்தியுள்ளனர்.

இன்றைக்கு நாம் சந்திக்கின்ற அனைத்து சிக்கல்களுக்கும், முரண்பாடுகளுக்கும், சாதிய பாகுபாடுகளுக்கும், பாலின பாகுபாடுகளுக்கும் அடிப்படை இந்த மனுஸ்மிருதி தான். மனுஸ்மிருதியை தனது அரசியல் கொள்கையாக ஏற்றுக் கொண்டுள்ள ஆர்எஸ்எஸ் ,மக்கள் இயக்கம் போல் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது.

ஆர்எஸ்எஸ் பிற இயக்கங்களைப் போல சராசரியான மக்கள் இயக்கம் கிடையாது. ஒரு கலாச்சார இயக்கமாகவும் இல்லை. அடிப்படையில் மதவாத அரசியலை, வெறுப்பு அரசியலை, வர்ண பாகுபாடு அரசியலை கொண்டுள்ளது. ஆர் எஸ் எஸ் ஒரு முறைக்கு இருமுறை தடை செய்யப்பட்ட ஒரு இயக்கம். இந்திய மண்ணில் முஸ்லிம் வெறுப்பையும், கிறிஸ்துவ வெறுப்பையும் விதைக்கும் ஒரு இயக்கம்.

செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர்

இந்துக்களை மேல் சாதி, கீழ் சாதி என பிளவுபடுத்தி அவர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. சமூக ஒற்றுமைக்கு எதிரானது. இதனால்தான் இந்த இயக்கம் தமிழ்நாட்டில் வேரூன்றுவது மிகவும் ஆபத்தானது என விசிக உட்பட அனைத்து கட்சிகளும் எச்சரிக்கிறோம். ஆர் எஸ் எஸ் இன் ஒரு பிரிவு பாரதிய ஜனதா கட்சி என்றாலும், பாரதிய ஜனதா கட்சி ஒரு அரசியல் இயக்கமாக இருக்கிறது.

பிஜேபி அரசியல் இயக்கம் என்பதனால் அது பேரணி நடத்துவதில் எந்தவித தயக்கமும் எங்களுக்கு இல்லை. ஆர் எஸ் எஸ் இன் அரசியல் பிரிவில் பிஜேபி இருக்கும் பொழுது பிஜேபி சார்பில் பேரணி நடத்தாமல் ஆர்எஸ்எஸ் சார்பில் பேரணி நடத்த வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது.

பிஜேபி 50 இடங்களில் பேரணி நடத்தி இருந்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டுமின்றி எந்த ஒரு கட்சியும் எதிர்ப்பு தெரிவித்து இருக்காது. தற்போது உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் ஆர்எஸ்எஸ் திணருகிறது. மாவட்ட வாரியாக ஆர்எஸ்எஸ் இன் மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல் கேட்டதற்கு பதில் அளிக்க முடியாமல் பின் வாங்கிக் கொண்டது. இந்துக்களின் நலனுக்காக தான் புரட்சியே மேற்கொள்கிறோம்” என்றார்.

இதையும் படிங்க: நாகர்கோவில் நடைபெற்ற சி ஐ டி யு தொழிற்சங்க பேரணி

ABOUT THE AUTHOR

...view details