தமிழ்நாடு முழுவதும் நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்க்கும்பொருட்டு கடந்தாண்டு பாலிதீன் கவர்கள், ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிக்குத் தடைவிதிக்கப்பட்ட நிலையில், பொதுமக்களிடையே நெகிழிப் பயன்பாட்டைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு சமூக செயற்பாட்டாளர்கள், பள்ளி, கல்லூரி, மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வுப் பரப்புரை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
அதன் ஒரு பகுதியாக மதுரை பெருங்குடி பகுதியில் தமிழ்நாடு இறையியல் கல்லூரி சார்பாக, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்வகையில் பொதுமக்களிடையே நெகிழிப் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்கும்வகையில், பெருங்குடியில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளுடன் தமிழ்நாடு இறையியல் கல்லூரி, லயன்ஸ் கிளப் சார்பாக விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.