மதுரை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இயக்குநர் பச்சையப்பன் மீது பல்வேறு புகார்கள் வந்த நிலையில் இருந்தன. குறிப்பாக, கோயில் உண்டியல் எண்ணும்போது ரூபாய்த்தாளை எடுத்தார் என்றும், கடந்த வருடம் தன்னுடைய பிறந்தநாளை மதுரை எல்லீஸ் நகர் அலுவலகத்தில் பிரமாண்டமாக கொண்டாடி கீழ்மட்ட அலுவலர்களை கட்டாயப்படுத்தி வரவைத்து பரிசுகளைப் பெற்றதாகவும், பணி நியமனங்களில் லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டியதாகவும் கூறப்பட்டது.
பெண் குளிப்பதை வீடியோ எடுக்க முயன்ற அறநிலையத்துறை இணை இயக்குநருக்கு ஜாமீன்!
மதுரை: பெண் அலுவலர் குளிப்பதை வீடியோ எடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை மதுரை மண்டல இணை இயக்குநர் பச்சையப்பனுக்கு பேரையூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில், சமீபத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் நிகழ்ச்சிக்கான பணிகளுக்காக திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து சதுரகிரி வந்திருந்த பெண் அலுவலர், அறநிலையத்துறை விடுதியில் தங்கியிருந்தார். அங்கு, சம்பந்தமின்றி பேனா ஒன்று இருப்பதை கவனித்த அப்பெண், அதை சோதனை செய்தபோது, அதில் தான் குளிப்பது போன்ற வீடியோ பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், உடனடியாக மதுரை மாவட்ட காவல்துறை உயர் அலுவலரிம் இது தொடர்பாக புகார் செய்ய, விரைவாக வழக்குப்பதிவு செய்து பச்சையப்பனிடம் விசாரணை நடத்திவிட்டு சிறைக்கு அழைத்துச் சென்றனர். அறநிலையத்துறையின் உயர் அலுவலர், சக பெண் அலுவலரை ஆபாச வீடியோ எடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பச்சையப்பன் பேரையூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.