தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் ஆள்மாறாட்ட வழக்கு: 2 மாணவர்களுக்கு ஜாமின்!

சென்னை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் 2 மாணவர்களுக்கு ஜாமின் வழங்கியும் அவர்கள் தந்தைகளின் ஜாமின் மனுக்களைத் தள்ளுபடி செய்தும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

By

Published : Oct 30, 2019, 2:44 PM IST

Updated : Oct 30, 2019, 4:46 PM IST

neet

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் முதன்முதலாகக் கைதான சென்னை மாணவர் உதித்சூர்யா அவரின் தந்தை டாக்டர் வெங்கடேசன் அளித்த தகவலின் அடிப்படையில் சிபிசிஐடி விசாரணை நீண்டது. இதில் மாணவர்கள் பிரவீன், ராகுல் ஆகியோர் நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, பிரவீன், அவரது தந்தை சரவணன், ராகுல், அவரது தந்தை டேவிட் ஆகிய 4 பேரை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைந்தனர்.

இந்நிலையில், நான்கு பேரும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன.

அவற்றை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மாணவர்கள் ராகுல் டேவிஸ், பிரவீன் ஆகியோருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அவர்களது தந்தை டேவிஸ், சரவணன் ஆகியோரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ‘ஒவ்வொரு முறையும் உயிர்பலி வேண்டுமா?’ - அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Last Updated : Oct 30, 2019, 4:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details