மதுரை:அலங்காநல்லூர் பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து. தகவலறிந்த காவல்துறையினர் மாறுவேடத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து மது வாங்குவது போல் நடித்து அங்கும் இங்கும் நடந்து சென்றனர். இதனை பார்த்த பெண் ஒருவர் காவல்துறையினர் என்பது தெரியாமல் அவர்களிடமே மதுபாட்டில்கள் தருவதாகவும், ரூ.200 ஆகும் எனவும் கூறியுள்ளார்.
கரும்புத் தோட்டத்தில் மறைத்து வைத்து மது விற்பனை: பெண் ஒருவர் கைது
அலங்காநல்லூர் கரும்புத் தோட்டத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த பெண் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கரும்புத் தோட்டத்தில் மதுபாட்டில்கள் - மாறுவேடத்தில் சென்ற காவல்துறையினர்!
இதையடுத்து காவல்துறையினர் அப்பெண்ணை பிடித்து விசாரணை செய்தபோது, மதுபாட்டில்களை கரும்பு தோட்டத்தில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தது வலசை பகுதியை சேர்ந்த சின்னழகி என்று தெரியவந்தது. அவரை கைது செய்து தோட்டத்தில் வைத்திருந்த 71 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அலங்காநல்லூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:'பிரசவத்திற்கு மட்டுமல்ல கரோனா நோயாளிகளுக்கும் இலவசம்' - ஆட்டோக்காரர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு