தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் நடமாடும் நியாய விலைக் கடை - அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரை: நடமாடும் நியாயவிலைக் கடைகளை முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைப்பார் என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

sellur raju
sellur raju

By

Published : Aug 1, 2020, 10:42 PM IST

மதுரை மாநகர் பி.பி. குளம் அருகேயுள்ள அரசுப் பள்ளியில் நடைபெறும் ரத்ததான முகாமை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார். அவருடன் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, "110 விதியின்படி நடமாடும் ரேஷன் கடைகளை மிக விரைவாக முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கவுள்ளார். கிராமத்தில் இரண்டு கிலோ மீட்டர் முதல் ஐந்து கிலோமீட்டர் வரை நடந்து சென்று நியாய விலைக் கடைகளில் மக்கள் பொருள்கள் வாங்க வேண்டிய நிலை உள்ளது. அவர்களுக்கு நடமாடும் நியாய விலைக் கடைகள் மூலம் எளிதாக பொருள்கள் கிடைக்க இந்தத் திட்டம் தொடங்கப்படவுள்ளன.

ஆகஸ்ட் 6ஆம் தேதி மதுரை வரும் முதலமைச்சர் பல முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கிறார். இரண்டு ஆண்டுகளில் மதுரை வளர்ந்த நகரமாக மாற உள்ளது. வைகை கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் மதுரையில் குழாயை திறந்தால் 24 மணி நேரமும் தண்ணீர் வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. புதிய கல்விக் கொள்கையை பற்றி முதலமைச்சரே அறிவிப்பார்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:கோவிட்-19 நெருக்கடி : நாடு முழுவதும் நீர் இருப்பு குறைகிறது - ஜல் சக்தி வெளியிட்டுள்ள அதிர்ச்சிகர தகவல்!

ABOUT THE AUTHOR

...view details