மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் காவல் நிலைய காவலர்கள் செல்வம், கரிகாலன் ஆகிய இருவரும் விளாச்சேரி கருப்பு கோயில் அருகில் வாகன சோதனை செய்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் காவலர்களை பார்த்தவுடன் தப்பி ஓட முயன்றார்.
காவலர்கள் இருவரும் துரத்தி சென்று அந்த நபரை பிடித்தனர். அப்போது, அவர் மதுரை மீனாம்பாள்புரம், சத்யா நகரைச் சேர்ந்த செல்வம் என்பவருடைய மகன் அருண்குமார்(30) என்பது தெரியவந்தது. மேற்படி நபரை சோதனை செய்தபோது அவர் அபாயகரமான பெரிய கத்தி(வாள்) ஒன்று வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் கைது! உடனடியாக அந்த நபரை திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், முன்விரோதம் காரணமாகவும், பழிக்குப் பழி தீர்க்கும் எண்ணத்தில் ஒரு நபரை கொலை செய்வதற்காக அபாயகரமான இரண்டடி நீளமுள்ள பெரிய கத்தியை வைத்திருந்ததாக கூறினார்.
எனவே திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் மதன கலா, அருண்குமாரை கைது செய்து அவரிடமிருந்த கத்தி, இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார்.
இதையும் படிங்க: நிர்வாண கோலத்தில் காரில் கிடந்த காதலர்களின் சடலங்கள்..! மரணத்திற்கான காரணம் என்ன?