தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழர்கள் மீது மத்திய அரசு அக்கறை காட்டுவதில்லை - கமல்

மதுரை: ஐநா சபையில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது, தமிழர்கள் மீது எவ்வித அக்கறையும் இல்லை என்பதைக் காட்டுகிறது என மநீம தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

kamal-hassan
கமல் ஹாசன்

By

Published : Mar 24, 2021, 9:08 PM IST

மதுரை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், "ஐநா சபையில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது. தமிழர்கள் மீது எவ்வித அக்கறையும் மத்திய அரசுக்கு இல்லை என்பதைக் காட்டுகிறது. பாஜக அரசின் இந்த நடவடிக்கை அவர்களுக்கு நன்மை பயக்காது.

எங்களது தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு ஒரு கணினி வழங்குவதாக அறிவித்துள்ளோம். இதன்மூலம் தமிழ்நாட்டைக் தாள் பரிமாற்றம் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

கணினி வழிச் செயல்பாடு மூலம் இடைத்தரகர்கள் அகற்றப்படுவர். தற்போது, வெளிவரும் கருத்துக் கணிப்பு எல்லாமே கருத்துத் திணிப்பு" என விமர்சனம்செய்தார்.

மநீம தலைவர் கமல் ஹாசன் செய்தியாளர் சந்திப்பு

இதையும் படிங்க:இது ஜனநாயக இந்தியாவே அல்ல!

ABOUT THE AUTHOR

...view details