தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10ஆம் வகுப்பு மாணவி வன்புணர்வு; தாயின் ஆண் நண்பர் கைது

உடல் நிலை பாதிக்கப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாகக் கூறி, வீட்டுக்குள் வைத்து பாலியல் வன்புணர்வு செய்தவரை காவலர்கள் கைதுசெய்தனர்.

Madurai
Madurai

By

Published : Aug 30, 2021, 5:14 AM IST

மதுரை : திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண்ணின் மகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த நபரை காவலர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

வடமதுரை இ.பி.காலனி அருகே உள்ள சத்யா நகரைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 35). இவர் வேடசந்தூர் அருகே உள்ள தனியார் நூற்பாலை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

அதே நூற்பாலையில் திண்டுக்கல்லைச் ஆர்.எம்.காலனியை சேர்ந்த செல்வி (45)என்பவரும் வேலை பார்த்து வந்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது.

செல்வி தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனால் சிவகுமார் அடிக்கடி திண்டுக்கல்லில் உள்ள செல்வி வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.

செல்விக்கு 2 மகள்கள் உள்ளனர். இரண்டாவது மகள் திண்டுக்கல்லில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை (ஆக.25) அன்று மாணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

அப்போது சிவகுமார் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி வடமதுரையில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இது குறித்து சிறுமி தனது தாயார் செல்வியிடம் கூறியபோது, “வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது” என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி தனது உறவினர்களிடம் நடந்த விஷயத்தை பற்றி கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து சிறுமியின் உறவினர்கள் வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் மகளிர் போலீசார் சிவக்குமார் செல்வி ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க : குடிபோதையில் மூதாட்டியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டவருக்கு தர்மஅடி!

ABOUT THE AUTHOR

...view details