கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மூன்றில் ஒரு நோயாளிக்கு ஆக்ஸிஜன் முறையில் சிகிச்சை வழங்கப்பட வேண்டிய சூழல் உள்ளதால் தொடர்ந்து மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் வசதியைப் பூர்த்திசெய்வதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
மேலும் நோயாளிகளுக்கான ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டைக் குறைக்க வேண்டி பல்வேறு தன்னார்வ நிறுவனங்களும் அரசுக்கு உறுதுணையாகப் பணியாற்றிவருகின்றன.
அந்தவகையில் மதுரையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கள் விடுதியில் உள்ள படுக்கையை ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பொருத்தும் வகையிலான படுக்கையாக வடிவமைத்து கல்லூரி நிர்வாகத்தின் ஆதரவோடு அதனை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் வழங்கினர்.
ஆக்ஸிஜன் சிலிண்டருடன் கூடிய படுக்கை: வடிவமைத்த பொறியியல் கல்லூரி மாணவர்கள்!
மதுரை: பொறியியல் கல்லூரி மாணவர்கள், விடுதியில் உள்ள படுக்கையை மாற்றியமைத்து ஆக்ஸிஜன் சிலிண்டர் பொருத்தும் வகையில் மருத்துவப் பயன்பாட்டிற்காக வடிவமைத்து மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.
ஆக்ஸிஜன் சிலிண்டருடன் கூடிய படுக்கை