தமிழ்நாடு

tamil nadu

போக்குவரத்து காவலருக்கு கரோனா - 41 பேருக்கு பரிசோதனை!

By

Published : Apr 27, 2020, 10:26 AM IST

மதுரை: போக்குவரத்து காவலருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு குடும்பத்தினர் உள்பட அவருடன் தொடர்பில் இருந்த 41 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

மதுரை போலீஸ் கரோனா உறுதி  போலீஸ் கரோனா உறுதி  தமிழ்நாடு போலீஸ் கரோனா உறுதி  Madurai Police confirmed Corona  Police confirmed Corona  Tamil Nadu Police confirmed Corona
Madurai Police confirmed Corona

மதுரை மாவட்டம், பெருங்குடி பகுதியைச் சேர்ந்தவர் போக்குவரத்து காவலர். இவர் மதுரை திடீர் நகர் பகுதியில் பணிபுரிந்த நிலையில் அவருக்கு நேற்று கரோனா நோய்த் தொற்று அவருக்கு உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்பட அவருடன் தொடர்பில் இருந்த 41 பேரிடம் ரத்த மாதிரி, சளி, காய்ச்சல் போன்ற பரிசோதனை நடைபெற்று வருகிறது. தற்போது பெருங்குடி பகுதி தனிமைப்படுத்தப்பட்டு அப்பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு சுகாதாரத் துறையினரால் தீவிர கண்காணிப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

போக்குவரத்து காவலர்

இதைத் தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கும் 14 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு வீடுகள்தோறும் காய்கறிகளும் விநியோகிக்கப்படுகின்றன.

இதையும் படிங்க:காவலர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிய கோவை ஐ.ஜி!

ABOUT THE AUTHOR

...view details