தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையின் பழமை மாறாமல் நவீன மயமாக்க பாடுபடுவேன் - புதிய மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன்

மதுரை: பழமையும் தொன்மையும் மாறாமல் நவீனமயமாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரையின் புதிய மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ள கே பி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

By

Published : Jun 15, 2021, 2:19 AM IST

commissioner
commissioner

மதுரை மாநகராட்சியின் 69ஆவது ஆணையாளராக கே.பி.கார்த்திகேயன் நேற்று (ஜூன்.14) பொறுப்பேற்றுக் கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மிகுந்த தொன்மையும், பாரம்பரியமும், பழமையும் நிறைந்ந மதுரை மாநகராட்சியின் ஆணையாளராக பணியாற்ற வாய்ப்பு தந்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாநகராட்சியான மதுரையில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. மதுரையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டம், அம்ருத் திட்டங்களை செம்மைப்படுத்தி மேம்படுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுரை பழமையும், தொன்மையும் மாறாமல் நவீன மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து அலுவலர்களின் ஆலோசனைகள், பொதுமக்கள் கருத்துக்களை பெற்று மதுரையை நவீனமயமாக்கும் திட்டங்கள் வகுக்க அடிப்படைப் பணிகள் தொடங்கப்படும்.

மதுரையில் கரோனா பரவல் குறைந்துள்ளது. கரோனா தடுப்புப் பணிகள் நல்லமுறையில் சென்று கொண்டிருக்கின்றன. அவ்வாறே பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details