தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அஞ்சல் துறை தேர்வு; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை: தமிழ்நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ள தபால் துறைக்கான தேர்வு முடிவுகளை வெளியிட கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மதுரை கிளை உயர்நீதிமன்ற அதிரடி உத்தரவு !

By

Published : Jul 14, 2019, 12:00 AM IST

மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஆசிர்வாதம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் தபால் துறை தேர்வுகளில் இனி இந்தி ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும் என அனைத்து மாநிலங்களிலும் உள்ள தலைமை அஞ்சலகங்களில் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது

இதற்கான வினாத்தாளில் அந்தந்த மாநில மொழிகள் மற்றும் இந்தி ஆங்கிலம் என மூன்று மொழிகளில் இருக்கும் நிலையில் கிராமிய அஞ்சல் பணியிடங்களுக்கான அறிவிப்பை தபால் துறை கடந்த ஜூன் 4-ஆம் தேதி வெளியிட்டது. அதில் தபால் துறை தேர்வுகளில் முதல் வினாத்தாள் இந்தி மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் மட்டுமே கேட்கப்படும் என்றும் அந்தந்த மாநில மொழிகளில் இடம்பெறாது எனவும் இரண்டாம் தாளுக்கான தேர்வு அந்தந்த மாநில மொழிகளில் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

கிராமிய அஞ்சல் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட வேண்டும். மேலும், தபால் துறை தேர்வுகளை அந்தந்த மாநில மொழிகளிலும் எழுதும் வகையில் தேர்விற்கான புதிய அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்று விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு, மகாதேவன் ஆகியோர் தேர்வினை எழுதலாம். ஆனால் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details