மதுரை:முதுகுளத்தூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை சங்கத்தின் தலைவர் சங்கரபாண்டியன், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "நான் முதுகுளத்தூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை சங்கத்தின் தலைவராக உள்ளேன். தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், அதன் உறுப்பினர்களுக்குக் கடன் வழங்குதல் மற்றும் இதர பணப்பரிமாற்றம் செய்வதற்கு காசோலை வழங்கப்பட்டது.
இந்த கூட்டுறவு சங்கங்களின் பணப் பரிவர்த்தனைக்கு சங்கங்களின் தலைவர் கசோலையில் கையெப்பம் இடும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. கடந்த 22.03.2022 அன்று, கூட்டுறவு பதிவாளர் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டார். பதிவாளரின் சுற்றறிக்கையின் படி சங்கங்களின் தலைவர் காசோலையில் கையொப்பமிடும் அதிகாரம் ரத்து செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் இராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர், மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை மேலாளர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், கூட்டுறவு கடன் சங்க தலைவர்கள் கையொப்பமிட்டு வழங்கப்பட்டுள்ள காசோலைகளைப் பணப்பரிவர்த்தனைக்கு ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்று மற்றொரு சுற்றறிக்கை 06.04.2022 அன்று வழங்கப்பட்டுள்ளது.