நாகர்கோவிலைச் சேர்ந்தஜெயக்குமார் தாமஸ்பேச்சிப்பாறை நீர்த்தேக்கம்பெருஞ்சாணி அணை, சித்தாறு 1 மற்றும் 2, முக்கூடல் அணைஆகியவற்றை தூர்வார வேண்டுமென மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதேபோல,
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ்," ஆழியாறு, அமராவதி,பவானிசாகர்,கல்லணை, கொடிவேரி,கிருஷ்ணகிரி,மேட்டூர்,பாபநாசம்,பேச்சிப்பாறை,பெருஞ்சாணி,சாத்தனூர் ஆகிய அணைகளை உடனடியாக தூர்வாரி, நீர் கொள்ளும் பரப்பை மேம்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு,
1. தமிழகத்தில் எத்தனை அணைகள்,உள்ளன?
2.முக்கியமான கண்மாய்கள் எத்தனை?
3. தமிழக அணை மற்றும் கண்மாய்கள் எப்போது கடைசியாக தூர்வாரப்பட்டன?
4. தமிழக அணைகள் கட்டப்பட்டபோது அவற்றின் கொள்ளளவு எவ்வளவு?
5.தற்போது அவற்றின் கொள்ளளவுஎவ்வளவு?
6.விவசாயிகள், மட்பாண்டம் செய்வோர் உள்ளிட்டோரைக் கொண்டு அணைகள் கண்மாய்களில் இருக்கும் மணல், களிமண்ணை எடுக்க வாய்ப்புள்ளதா?
7. ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு தண்ணீர் வீணாக சென்று கடலில் கலக்கிறது?
8.கடந்த 10 ஆண்டுகளாக தமிழக அணைகளைதூர்வாரி பராமரிக்க எவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளது?
9.குடிமராமத்து பணி மூலம் ஏதேனும் அணை தூர்வாரப்பட்டுள்ளதா?
என கேள்வி எழுப்பினர். கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், அதனை பயன்படுத்தி, அணைகளை தூர்வார வேண்டும், என தெரிவித்த நீதிபதிகள், இதுகுறித்து பொதுப்பணித்துறை செயலர், தலைமை பொறியாளர்நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.