தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசிரியர் காலியிடங்களின் விபரத்தை இணையதளத்தில் வெளியிட வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் காலிப்பணியிடங்களின் விபரங்களை ஜூன் 1 ஆம் தேதி இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Madurai

By

Published : Mar 17, 2019, 3:20 PM IST

Updated : Mar 17, 2019, 5:07 PM IST

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2018-ல் பணம் பெற்றுக்கொண்டு முறைகேடாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்என வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கானது இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் கூறியதாவது:

”பள்ளிக்கல்வித்துறையின் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்விற்கான அரசாணை மே 2018-ல் வெளியிடப்பட்டது. ஆனால் மனுதாரர் விதிகளை மீறி ஆசிரியர்கள் பணியிட மாற்றம் நடைபெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் 2018ஆம் கல்வியாண்டில் நிர்வாக மாறுதலில் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 74 பேரும், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 19 பேரும், முதுகலை ஆசிரியர்கள் 680 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 408 பேரும் என ஆயிரத்தி 181 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நிர்வாக மாறுதலில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.

ஆசிரியர் பொதுக்கலந்தாய்வு, நிர்வாக மாறுதல் கலந்தாய்வின் போது விதிமுறை, வழிமுறைகளில் அரசுநடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.பொதுக்கலந்தாய்வின் போதுஆசிரியர்கள் பதவி உயர்வு, பள்ளிகள் தரம் உயர்த்துவதால் ஏற்படும் இடத்திற்கும் நடத்த வேண்டும். ஆண்டுதோறும் ஆசிரியர் பணியிட மாறுதல் பொதுக்கலந்தாய்விற்கான அரசாணையை ஆண்டு தோறும் மே 15ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் காலிப்பணியிடங்களின் விபரங்களை ஜீன் 1ஆம் தேதி இணையதளத்தில் வெளியிட வேண்டும். கலந்தாய்வு நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர் காலிப்பணியிடங்களின் விபரத்தை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

அனைத்துப் பணியிலும் பதவி உயர்விற்கு தகுதிப்பெற்றவர்களின் பட்டியலை கலந்தாய்விற்கு முன்னர் வெளியிட வேண்டும்.

ஆசிரியர்கள் பொதுப்பணியிட மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பம் செய்தவர்களின் விபரத்தை விதிகளின் படி இடம், முன்னுரிமை உள்ளிட்டவற்றுடன் இணையதளத்தில் வெளியிட வேண்டும்.பொது மாறுதல் கலந்தாய்வின் போது ஏற்படும் ஆசிரியர் காலிப்பணியிட விபரத்தையும் உடனே வெளியிட வேண்டும். அதனால் அந்த இடத்தை வேறு ஒரு ஆசிரியர் தேர்வு செய்ய முடியும்.

ஆசிரியர்கள் பணியிட மாறுதல் விபரத்தை காலதாமதம் செய்யாமல் இணையதளத்தில் வெளியிட வேண்டும். பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் போது ஏற்படும் காலிப்பணியிடங்களின் விபரத்தையும் இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு, இறப்பு, பதவி விலகல், பதவி உயர்வு, பள்ளிகளை தரம் உயர்த்துவதால் ஏற்படும் காலிப்பணியிடம் போன்றவற்றிக்கு மீண்டும் ஒரு பொதுக்கலந்தாய்வு நடத்தலாம். பள்ளிகள் தரம் உயர்வு, ஆசிரியர்கள் பதவி உயர்வு போன்றவற்றால் ஏற்படும் காலிப்பணியிடத்திற்கு நிர்வாக மாறுதல் அளிக்கக் கூடாது.

ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வினை வெளிப்படைத்தன்மையுடன் நடத்த வேண்டும். ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளி, இடம் உள்ளிட்ட விபரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும்” என அதில் கூறியுள்ளனர்.

Last Updated : Mar 17, 2019, 5:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details