தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை - சண்டிகர் ரயில் சேவை தொடக்கம்

மதுரை - சண்டிகர் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

மதுரை - சண்டிகர் ரயில் சேவை தொடக்கம்
மதுரை - சண்டிகர் ரயில் சேவை தொடக்கம்

By

Published : Jul 4, 2021, 12:34 AM IST

மதுரை: மதுரை - சண்டிகர் ரயில் சேவை வருகிற ஜூலை 16ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

மதுரை - சண்டிகர் ரயில் நிலையங்கள் இடையே ஜூலை 11 முதல் ரயில் போக்குவரத்து தொடங்க இருக்கிறது. அதன்படி வண்டி எண் 02687 மதுரை - சண்டிகர் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் மதுரையிலிருந்து ஜூலை 11 முதல் மறு அறிவிப்பு வரும் வரை ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு, புதன் கிழமை அதிகாலை 03.50 மணிக்கு சண்டிகர் சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் வண்டி எண் 02688 சண்டிகர் - மதுரை வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் சண்டிகரில் இருந்து ஜூலை 16 முதல் வெள்ளிக் கிழமைகளில் காலை 08.05 மணிக்கு புறப்பட்டு, ஞாயிற்றுக் கிழமை நண்பகல் 01.55 மணிக்கு மதுரை வந்து சேரும்.

இந்த ரயில்களில் மூன்று குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், ஒன்பது இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், நான்கு இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், இரண்டு சரக்கு, காப்பாளர் பெட்டிகள் இணைக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details