தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் காணாமல் போன ஆபரணங்களை கண்டிபிடிக்கக் கோரிய மனு ஒத்திவைப்பு!

Madurai Bench: திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் காணாமல் போன விலைமதிப்பற்ற ஆபரணங்களை கண்டிபிடிக்கக் கோரிய மனுவை டிசம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2023, 6:51 AM IST

மதுரை: திருவட்டாறைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் கோவில் எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் இத்திருக்கோயில் உள்ளது.

திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில் மற்றும் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் மதிப்புமிக்க ஆபரணங்கள் இருப்பதாக நம்பப்படுகின்றது. இந்த இரண்டு கோயில்களும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்தக் கோயிலில் கடந்த 1992ஆம் ஆண்டு மதிப்புமிக்க தங்க ஆபரணங்கள் திருடப்பட்டது.

மேலும், இந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது, இதற்காக இக்கோயில் புனரமைக்கப்பட்டது. அப்போது, சில அறைகள் இடிக்கப்பட்டதில் விலைமதிப்பற்ற சில பொருட்கள் மாயமாகின. எனவே, ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் உள்ள விலைமதிப்பற்ற பொருட்கள், நகைகள் உள்ளிட்டவை குறித்து முறையாக பதிவேட்டை பராமரிக்குமாறும், கோயிலில் மாயமான மதிப்புமிக்க ஆபரணங்களைக் கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட வேண்டும் "என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு நேற்று (நவ.27) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மனு மீதான விரிவான விசாரணையை டிசம்பர் 4 தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க:அமெரிக்காவில் மீட்கப்பட்ட ராஜராஜ சோழனின் பாட்டி வழங்கிய நடராஜர் சிலை..! மக்கள் தரிசனத்திற்காக சிவபுரம் கோயிலுக்கு வருகை!

ABOUT THE AUTHOR

...view details