உலகப் புகழ்பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் சித்திரைத் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. ஆண்டுதோறும் மதுரையில் நடைபெறும் இந்த விழாவைக் காண லட்சக்கணக்கான மக்கள் வருகின்றனர்.
இதனையொட்டி கள்ளழகர் அழகர்கோவில் திருமாலிருஞ்சோலையில் இருந்து இன்று அதிகாலை புறப்பட்டு இன்று மாலை மதுரை நோக்கிச் சென்றார். மண்டூக மகரிஷிக்கு மாற்றம் கொடுப்பதற்காக மதுரைக்கு பயணிக்கும் கள்ளழகர் ஆழ்வார்புரம் அருகிலுள்ள வைகை ஆற்றில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் நாள் அதிகாலை எழுந்தருளுகிறார் .
20ஆம் தேதி வீரராகவ பெருமாள் அவரை வரவேற்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு வைகை ஆற்றங்கரையோரம் நூற்றுக்கணக்கான மண்டகப்படிகளில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்து ராமராயர் மண்டபத்தில் சென்றடைகிறார். அங்கு பிற்பகலில் அவருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பிறகு அங்கிருந்து புறப்படும் அழகர் வண்டியூர் செல்கிறார். வண்டியில் வைகையாற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் ஏப்ரல் 20 ஆம் தேதி மண்டுக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார். இதையடுத்து தல்லாகுளத்தில் நடைபெறும் பூப்பல்லக்கு நிகழ்ச்சியில் கள்ளழகருக்கு பிரியாவிடை அளிக்கப்படுகிறது.