தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொலை குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற அனுமதி கேட்டு மனு: வழக்கு ஒத்திவைப்பு

கொலை வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற அனுமதி கேட்டு கும்பகோணம் காவல் துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கை ஜூன் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

வழக்கு ஒத்திவைப்பு
வழக்கு ஒத்திவைப்பு

By

Published : Jun 15, 2022, 10:51 PM IST

மதுரை:தஞ்சையைச் சேர்ந்த பிரபல ரவுடி கட்டை ராஜா. இவர் மீது பட்டீஸ்வரம், கும்பகோணம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் 16 வழக்குகள் கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் உள்ளன.

கும்பகோணம் திப்பிராஜபுரம் அருகே சென்னியமங்கலத்தில் செந்தில்நாதன் என்பவரை 2013இல் கொலை செய்த வழக்கில் கட்டை ராஜா கைது செய்யப்பட்டார். அவருக்கு தூக்கு தண்டனையும், கூட்டாளிகளான ஆறுமுகம், செல்வம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி கும்பகோணம் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கட்டை ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற அனுமதி கேட்டு கும்பகோணம் காவல் துறை சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆறுமுகம், செல்வம் ஆகியோர் ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.

முன்பு விசாரணையின்போது, கட்டைராஜா, ஆறுமுகம், செல்வம் ஆகியோர் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து கட்டை ராஜா உள்பட 3 பேரையும் காணொலி வாயிலாக ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கானது நீதிபதிகள் பி.என் பிரகாஷ் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு இன்று (ஜூன் 15) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கட்டை ராஜா, ஆறுமுகம், செல்வம் ஆகிய 3 பேரும் மதுரை மத்திய சிறையில் இருந்து காணொலி வாயிலாக நீதிபதிகள் முன்பு ஆஜராகினர்.

கட்டை ராஜா, ஆறுமுகம், செல்வம் ஆகியோர் தரப்பில் வழக்கறிஞர்கள் நியமிக்க கால அவகாசம் கேட்டனர். தூக்கு தண்டனை தொடர்பான வழக்குகளில் கால தாமதம் செய்ய முடியாது என்று கூறினர். மேலும் வழக்கு விசாரணையை ஜூன் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: தாம்பரத்தில் உருவாக்கப்பட்ட புதிய காவல் ஆணையரகம் - 5 மாதங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details