தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 4, 2020, 8:47 PM IST

ETV Bharat / state

கூடங்குளம் சுற்றுச்சூழல் பாதிப்பு வழக்கு - ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

திருநெல்வேலி: கூடங்குளத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய உணவுப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai high court
madurai high court

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தைச் சேர்ந்த எழிலரசு என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "கூடங்குளம் கடலோரக் கட்டுப்பாட்டு மண்டலப்பகுதியில் பல தனியார் மீன் உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்களின் கழிவுகள் முறையாக வெளியேற்றப்படாமல் இருப்பதால் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் அதனருகிலுள்ள மக்கள் கண் எரிச்சல், தூக்கமின்மை உள்ளிட்டவற்றால் பாதிப்படைகின்றனர். எனவே சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தி வரும் மீன் உணவுப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் நான்கு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:நீர்வழிப் பாதை ஆக்கிரமிப்பு வழக்கு - வருவாய் அலுவலர்கள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details