திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரியா என்வர் சர்வேயர் காலனி பகுதியில் ஆயுர்வேத அழகு நிலையம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு (ஜூன் 7) அழகு நிலையத்திற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் அங்கிருந்த ஊழியர்களிடம் கத்தி முனையில் 7 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் பணம், செல்போன்கள், சிசிடிவி கேமரா உள்ளிட்டவற்றை பறித்து சென்றனர்.
கத்தி முனையில் பணம் நகை கொள்ளை!
மதுரை: அழகு நிலையத்தை அடித்து நொறுக்கி நகை, பணம் மற்றும் செல்போன்கள் உள்ளிட்ட பொருள்கள் திருடிச் சென்ற சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
file pic
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அழகு நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் மீனாவை சந்தேகத்தின் பேரில் அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.