தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ்: முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த பி.ஆர்.!

மதுரை: கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற்ற தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி எனத் தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவர் பி. ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த பி.ஆர்
முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த பி.ஆர்

By

Published : Feb 6, 2021, 10:17 AM IST

கடந்த 2017ஆம் ஆண்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டை மீட்டெடுக்கும் வண்ணம் ஒட்டுமொத்த தமிழர்களும் ஒன்றுசேர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது, போராடிய அனைவரின் மீதும் பதியப்பட்ட வழக்குகள் திரும்பப்பெறப்படும் என்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இது குறித்து தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவர் பி. ராஜசேகர் அளித்த பேட்டியில், “இந்த அறிவிப்பு உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை வெற்றிகரமாக பொங்கல் திருநாளில் அறிவித்தபடி அரசு நெறிமுறைகளோடு நடத்தப்பட்டது.

முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த பி.ஆர்.

அப்போது கிடைக்கப்பெற்ற மகிழ்ச்சியைவிட தற்போது முதலமைச்சரின் இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு உதவிய அமைச்சர்களுக்கும், அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு வழக்குகள் திரும்பப் பெறப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details