நாட்டில் மின்னல் வேகத்தில் பரவி வரும் வைரஸ் தொற்றை தடுக்கும் விதமாக மத்திய- மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அதேசமயம், மதுரையிலுள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்களின் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதரவற்ற நடைபாதைவாசிகளை மீட்டு தற்காலிக தங்கும் விடுதியில் சேர்த்துவருகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் உத்தரவின் பேரில் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து கரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள நடைபாதைவாசிகளை மீட்டு தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள நான்கு முகாம்களில் தங்கவைத்தோம். அந்த வகையில் தற்போதுவரை 167 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.