தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 23, 2020, 10:54 PM IST

ETV Bharat / state

கார்த்திகை தீபத் திருவிழா நடத்தக் கோரி இந்து முன்னணியர் ஆர்ப்பாட்டம்!

மதுரை: திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத் திருவிழா நடத்தக் கோரி இந்து முன்னணியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தீபத் திருவிழா
தீபத் திருவிழா

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருநாளான்று மலைமீதுள்ள உச்சிபிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்படும்.

இந்நிலையில் திருப்பரங்குன்றத்தின் உச்சியில் கார்த்திகை தீபம் திருவிழாவின் போது தீபம் ஏற்ற வேண்டும் என்று கோரி இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஷ்வரா சி. சுப்பிரமணியம் தலைமையில், அக்கட்சியினர் பதினாறுகால் மண்டபத்திலிருந்து, திருப்பரங்குன்றம் கோயில் வாசல் வரை கோஷம் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்தனர்.

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த இந்து முன்னணி மாநிலத் தலைவர் கூறும்போது, “பொதுச்செயலாளர் அரசு ராஜாவுடன் காசி விஸ்வநாதரை சாமி தரிசனம் செய்வதகற்காகத்தான் வந்தோம். ஆனால் காவல் துறை எங்களை தரிசிக்க அனுமதிக்க மறுத்தது. தொடர்ந்து வருகின்ற 28ஆம் தேதி கார்த்திகை மாதம் திருப்பரங்குன்றத்தில் மலைமேல் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் எனக் கோரி மிகப்பெரிய போராட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு உடனே தலையிட்டு மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு வழி செய்ய வேண்டும், இல்லையென்றால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும். தமிழ்நாடு அரசு நார்த்திக அரசாக செயல்படுவதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்துக்களுக்கு யார் ஆதரவாக உள்ளார்களோ அவர்களை என்றும் இந்து முன்னணி வரவேற்கும்” என்று கூறினார்

ABOUT THE AUTHOR

...view details