தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வடமாநில ஓட்டுநர் நெஞ்சுவலியால் உயிரிழப்பு: காவல்துறை விசாரணை..!

மதுரை: கன்டெய்னர் லாரி ஓட்டி வந்த வடமாநில ஓட்டுநர் நெஞ்சுவலியால் உயிரிழந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

By

Published : Dec 5, 2020, 11:06 PM IST

ஹரியானா ஓட்டுநர் நெஞ்சுவலியால் உயிரிழப்பு  ஓட்டுநர் நெஞ்சுவலியால் உயிரிழப்பு  மதுரையில் ஹரியானா ஓட்டுநர் நெஞ்சுவலியால் உயிரிழப்பு  Haryana driver dies of heart attack  Haryana driver dies of heart attack in madurai  driver dies of heart attack
Haryana driver dies of heart attack in madurai

மதுரை, பழங்காநத்தம் காளவாசல் புறவழிச்சாலை அருகே ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஹபீப் என்ற வடமாநில ஓட்டுநர், கன்டெய்னர் லாரி ஒன்றை ஓட்டி வந்துள்ளார். அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதனால், லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து, ஒரு சில வாகனங்கள் மீது உராய்ந்து திடீரென சாலை ஓரத்தில் நின்று உள்ளது.

நெஞ்சுவலி காரணமாக மயங்கி லாரியிலிருந்து கீழே விழுந்த ஓட்டுநர் ஹபிப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ்.எஸ் காலனி காவல் துறையினர் ஹபீப்பின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:தந்தை- மகன் உள்ளிட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

ABOUT THE AUTHOR

...view details