தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோகுல்ராஜ் கொலை வழக்கு குற்றவாளி யுவராஜ் கோவை சிறைக்கு மாற்றம்

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கோகுல்ராஜ் கொலைக் குற்றவாளி யுவராஜ், பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு மதுரை மத்திய சிறையிலிருந்து கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். மீதமுள்ள 9 குற்றவாளிகளும் மதுரை மத்திய சிறையில் உள்ளதாக மதுரை மத்திய சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோகுல்ராஜ் கொலை வழக்கு குற்றவாளி யுவராஜ் கோவை சிறைக்கு மாற்றம் : பின்னணி என்ன ?
கோகுல்ராஜ் கொலை வழக்கு குற்றவாளி யுவராஜ் கோவை சிறைக்கு மாற்றம் : பின்னணி என்ன ?

By

Published : Mar 10, 2022, 11:22 AM IST

மதுரை: சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 11 பேர் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் மார்ச் 5ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. மேலும் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அருள்செந்தில், சங்கர், செல்வக்குமார், சுரேஷ், தங்கதுரை ஆகியோர் வழக்கிலிருந்து விடுவித்திருந்தது.

இந்த வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 11 பேரில் ஜோதிமணி உயரிழந்தவிட்ட நிலையில், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவைத் தலைவர் யுவராஜ், அருண் (யுவராஜின் கார் ஓட்டுநர்), ரஞ்சித், செல்வராஜ், சதீஷ்குமார், ஸ்ரீதர் (எ) ரகு, சந்திரசேகரன், சிவக்குமார் (எ) குமார், பிரபு, கிரிதர் ஆகியோருக்கான தண்டனை விவரங்களை சிறப்பு நீதிபதி சம்பத்குமார் மார்ச் 8ம் தேதி அறிவித்தார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கு குற்றவாளி யுவராஜ் கோவை சிறைக்கு மாற்றம்

அதன்படி, வழக்கின் முதல் குற்றவாளியான யுவராஜூக்கு மூன்று ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இரண்டாம் குற்றாவளியான அவரின் ஓட்டுநர் அருண், குமார், சதீஷ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு இரண்டு ஆயுள் தண்டனையும், சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டள்ளது. பிரபு, கிரி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 5 ஆண்டு கடுங்காவலும் விதிக்கப்பட்டுள்ளது.

கோகுல்ராஜ் கொலை வழக்கு குற்றவாளி யுவராஜ் கோவை சிறைக்கு மாற்றம்

இந்த வழக்கில் தொடர்புடைய முதல் குற்றவாளியான யுவராஜ்க்கு 3 ஆயுள் தண்டனை உட்பட 10 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இந்நிலையில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த யுவராஜ், பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு மதுரை மத்திய சிறையிலிருந்து கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். மீதமுள்ள 9 குற்றவாளிகளும் மதுரை மத்திய சிறையில் உள்ளதாக மதுரை மத்திய சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோகுல்ராஜ் கொலை வழக்கு குற்றவாளி யுவராஜ் கோவை சிறைக்கு மாற்றம்

இதையும் படிங்க: யுவராஜூக்கு ஆயுள் தண்டனை: 'தூக்கை விட சரியானது இது' - கோகுல்ராஜின் தாயார்

ABOUT THE AUTHOR

...view details