மகாத்மா காந்தி கஸ்தூரிபா 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நீதி மற்றும் அமைதிக்கான உலகளாவிய நடைபயணத்தை 'ஜெய் ஜெகத்' எனும் பெயரில் ஏக்தா பரிசத் மக்கள் இயக்கம் நடத்தவிருக்கிறது.
இதனையொட்டி அந்த இயக்கத்தின் தலைவர் பி.வி.ராஜகோபல் மதுரை காந்தி அருங்காட்சியத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''சமூக நீதி மற்றும் அமைதிக்கான உலகளாவிய நடைபயணம் வருகின்ற அக்டோபர் 2ஆம் தேதி டெல்லியிலிருந்து தொடங்க உள்ளது.
ஜெய் ஜெகத் அமைப்பின் தலைவர் பி.வி.ராஜகோபல் ஐக்கிய நாடுகள் அவை நீடித்த வளர்ச்சியை வலியுறுத்தி 17 குறிக்கோள்களை அறிவித்துள்ளது. அந்த குறிக்கோள்களை வலியுறுத்தி இந்த நடைபயணத்தை மேற்கொள்ள இருக்கிறோம். 370 நாட்கள் 10ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்து 10லட்சம் மக்களை சந்திப்பதுதான் இந்தப் பயணத்தின் முக்கிய இலக்கு.
இந்தியாவில் இருந்து 200 பேர் இந்தப் பயணத்தில் பங்கு பெறுகிறார்கள். இதே போல் ஜெர்மனி, ஸ்பெயின்,பெல்ஜியம் ஆப்ரிக்க நாடுகளில் இருந்தும் மக்கள் நடைபயணமாக ஜெனிவா நகரக்கு செல்கிறார்கள்" என்றார்.