தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேவர் ஜெயந்தி: நீதிபதியின் கருத்து உள்நோக்கம் கொண்டது -முருகன் ஜி

மதுரை: தேவர் குருபூஜைக்கு அரசியல் தலைவர்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்கிற நீதிபதியின் கருத்து உள்நோக்கம் கொண்டது என பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் முருகன் ஜி தெரிவித்தார்.

murugan g
murugan g

By

Published : Oct 29, 2020, 10:31 PM IST

மதுரை திருமங்கலத்தில் பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் முருகன் ஜி செய்தியாளர்கள் சந்திப்பில், “காவல்துறையினர் இரக்கமற்ற தன்மையில் நடத்தப்படுவதாக உயர் நீதிமன்றம் கருத்து கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

இரவு பகலாக பாதுகாக்கும் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது வருத்தமளிக்கிறது. ஆனால், எங்கோ நடைபெறும் சில சம்பவங்களால் ஒட்டுமொத்த காவல்துறையையும் குற்றம்சாட்டும் மனநிலை கண்டிக்கத்தக்கது” என்றார்.

தேவர் குருபூஜைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறிய குறித்த கேள்விக்கு, "காந்தியின் சமாதிக்கு செல்லக்கூடாது என்று உயர்நீதிமன்றத்தால் கருத்து கூறமுடியுமா, மகாத்மா காந்திக்கும் சற்றும் குறைவில்லாத தேச பக்தியும், தியாக உணர்வும் கொண்ட முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜைக்கு அரசியல் தலைவர் செல்ல வேண்டாம் என்கிற நீதிபதியின் கருத்து உள்நோக்கம் கொண்டது" எனப் பதிலளித்தார்.

நீதிபதியின் கருத்து உள்நோக்கம் கொண்டது

இதையும் படிங்க:தேவர் ஜெயந்தி: மதுரை வரும் முதலமைச்சர் - மக்களை அச்சுறுத்தும் பேனர்கள்

ABOUT THE AUTHOR

...view details