தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலியாக கள் தயாரித்து விற்பனைசெய்த 4 பேர் கைது

மதுரை: கருப்பாயூரணி பகுதியில் போலியாக கள் தயாரித்து விற்பனை செய்துவந்த நான்கு பேரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

selling-fake-palm-wine
selling-fake-palm-wine

By

Published : Apr 20, 2020, 10:37 AM IST

மதுரை மாவட்டம் கருப்பாயூரணி பகுதியில் சிலர் செயற்கையாகக் கள் தயாரித்து விற்பனை செய்துவருவதாகக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து அங்கு விரைந்த காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையில், செயற்கை முறையில் கள் தயாரித்து விற்பனைசெய்து நான்கு பேர் கையும், களவுமாகப் பிடிப்பட்டனர். அதையடுத்து காவல் துறையினர் அவர்களிடமிருந்த 150 லிட்டர் போலியாகத் தயாரிக்கப்பட்ட கள், ரூ.3,065 ரொக்கம் பறிமுதல்செய்தனர்.

அதன்பின் காவல் துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணை, அவர்கள் நான்கு பேரும் ஓடைப்பட்டியைச் சேர்ந்த சேகர் (42), மணிகண்டன் (55), ராம்குமார், மதுரை ஜே.ஜே. நகரைச் சேர்ந்த மகேஸ்வரன் (33) என்பது தெரியவந்தது.

இதையும் படிங்க:150 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கண்டுபிடிப்பு: குற்றவாளிக்கு வலைவீச்சு!

ABOUT THE AUTHOR

...view details