மதுரை மத்திய சிறையில் 1,200-க்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகளும், தண்டனைக் கைதிகளும் உள்ளனர். அவர்களுக்கு அவசர காலங்களில் ஏற்படும் சிறுசிறு விபத்துகளின்போது, முதலுதவி அளிக்கும்முறை பற்றிய பயிற்சி வழங்கப்பட்டது.
கைதிகள்-காவலர்களுக்கு அவசரகால முதலுதவி பயிற்சி!
மதுரை: மத்திய சிறையில் அவசரகால முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து கைதிகள், சிறைக்காவலர்களுக்கு தனியார் மருத்துவமனை குழு சார்பாக மூன்று நாள்கள் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
firstaid-training
இந்தச் செய்முறை விளக்கத்தை தனியார் மருத்துவமனை சார்பாக இரண்டு மருத்துவர் குழு சிறைக்கு நேரில் வந்து தேர்வு செய்யப்பட்ட கைதிகளுக்கும், நுாற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினருக்கும் மூன்று நாட்களாக பயிற்சி வழங்கினர்.
இந்தப் பயிற்சியானது மதுரை சரக காவல் துறை துணைத் தலைவர் பழனியின் தலைமையில் நடைபெற்றது.