மதுரை அரசு கரோனா சிகிச்சை மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான கரோனா தொற்று நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கடந்த 30ஆம் தேதி முதல் மதுரை, பேரையூர், மல்லப்புரம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்ற மூதாட்டி, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, நுரையீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில், இன்று (ஜூன்.02) அதிகாலை படுக்கைக்கு மேலே இருந்த மின்விசிறி திடீரென பழுதாகி படுக்கையில் அமர்ந்திருந்த பாண்டியம்மாளின் தலையில் விழுந்தது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், அரசு கரோனா மருத்துவமனையில் உள்ள மின்சாதனப் பொருள்களைக் கண்காணித்து கோளாறுகள் இருந்தால் சரி செய்ய நோயளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருத்துவமனை மின் விசிறி கழண்டு விழுந்து பெண் நோயாளி படுகாயம்
மதுரை: புதிதாகக் கட்டப்பட்ட பல்நோக்கு அரசு மருத்துவமனையில் மின்விசிறி கீழே விழுந்து பெண் நோயாளி தலையில் காயமடைந்தது.
மதுரையில் மின் விசிறி விழுந்து பெண் நோயாளி படுகாயம்!