தமிழ்நாடு

tamil nadu

’கர்மாவின் அடிப்படையில் நீதிமன்றம் செயல்படாது..!’ - உயர்நீதிமன்ற மதுரை கிளை

By

Published : Oct 28, 2022, 12:28 PM IST

கர்மாவின் அடிப்படையில் நீதிமன்றம் செயல்படவில்லை. அரசியல் அமைப்பு சட்டத்தின் படியே நீதிமன்றங்கள் செயல்படுகிறது என மதுரை உயர் நீதிமன்றம் ஓர் வழக்கு விசாரணையில் தெரிவித்துள்ளது.

’கர்மாவின் அடிப்படையில் நீதிமன்றம் செயல்படாது..!’ - உயர்நீதிமன்ற மதுரை கிளை
’கர்மாவின் அடிப்படையில் நீதிமன்றம் செயல்படாது..!’ - உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை:மதுரை, அவனியாபுரம் காவல் நிலையத்தில் ரைட்டராக பணியாற்றியவர் ஸ்ரீமுருகன். இவர் நிர்வாகக் காரணங்களுக்காக தூத்துக்குடிக்கு மாற்றம் செய்ததை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, கர்மாவின் கொள்கைப்படி மனுதாரருக்கு நிவாரணம் தர நீதிமன்றம் விரும்புவதாக கூறி, தூத்துக்குடி மாவட்ட பணிமாற்றம் செய்ததை ரத்து செய்து மதுரை மாவட்டத்திற்கு போக்குவரத்து காவலராக மாற்றம் செய்ய வேண்டுமென உத்தரவிட்டிருந்தார்.

இதனை எதிர்த்து தென்மண்டல ஐஜி தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த அமர்வு நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்தது. பணி மாறுதல் செய்யப்பட்ட முருகன் தரப்பில் அமர்வு நீதிபதிகள் பிறப்பித்த தடை உத்தரவை ரத்து செய்ய கோரி மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு முந்தைய விசாரணையில் ஏற்கனவே நிலுவையில் உள்ள தென் மண்டல ஐஜி மேல் முறையீட்டு மனுவுடன் மனுதாரர் மேல்முறையீட்டு மனுவையும் சேர்த்து பட்டியலிடுமாறு கூறி விசாரணையை ஒத்தி வைத்தனர். இன்று இந்த வழக்கு நீதிபதி மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில், ”பணியிட மாறுதல் கொடுக்கப்பட்ட காவலர் மீது 16 குற்றச்சாட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், உயர்நீதிமன்ற உத்தரவின் படி காவலருக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டிருந்தது” எனதெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ”ஆஜரான வழக்கறிஞர், தண்டனைக்கு மேல் தண்டனை விதித்து வழங்கப்படும் சம்பளம் மிகவும் குறைவாக கொடுக்கப்படுகிறது. எனவே, இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டும்” என வாதிட்டார்.

இதற்கு நீதிபதிகள், ”கடந்த ஒன்றரை மாதத்தில் இந்த அமர்வு நாலாயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளை முடித்துள்ளது. கர்மாவின் அடிப்படையில் நீதிமன்றம் இயங்கவில்லை. அரசியல் அமைப்புச் சட்டம் படியே நீதிமன்றம் இயங்குகிறது. கர்மாவுக்கு என்று ஏதேனும் விதி உள்ளதா..?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள்
வழக்கை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: முதலில் அவங்க தமிழ் பேசட்டும்.. நம்ம அதுக்கு அப்புறம் யோசிக்கலாம் - கனிமொழி

ABOUT THE AUTHOR

...view details