தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரும்பு காட்டுக்குள் புகுந்த யானைபோல் பரவும் கரோனா வைரஸ் - ஆர்.பி. உதயகுமார்

மதுரை: கரும்பு காட்டுக்குள் புகுந்த யானை போல் நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவி வருவதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

minister udyakumar
minister udyakumar

By

Published : Mar 15, 2020, 8:05 PM IST

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி அலுவலர் சங்கம் மாநில மாநாட்டின் 17ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இன்றைக்கு கரும்பு காட்டுக்குள் புகுந்த யானை போல் நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவி வருகிறது. கரோனாவால் தமிழரின் பாரம்பரியமான வணக்கம் சொல்லும் பழக்கம், இன்று உலகம் முழுவதும் பரவி கடைபிடிக்கக்கப்பட்டு வருகிறது. அதற்காக கரோனாவை வணக்கம் சொல்லி வரவேற்கவோ, நன்றியோ கூற முடியாது.

மத்திய அரசிடமிருந்து கரோனா வைரஸ் சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்கான நிதி ஒதுக்கீடு பணிகளும் தொய்வின்றி நடைபெற்று வருகிறது. பேரிடர் காலங்களின் போது எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலவே கரோனாவிற்கும் சுகாதார அமைச்சரும், செயலரும் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.

கரோனா குறித்து தெரிவிக்கும் அமைச்சர் உதயகுமார்

மேலும், தமிழ்நாட்டில் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும், சிஏஏ சட்டத்தில் எந்த பிரச்னையும் இல்லை, அச்சப்பட வேண்டிய அவசியமில்லை" என்றார்.

இதையும் படிங்க:ஐஐடி மாணவர்களுக்கான இலவச திறன் மேம்பாட்டு வகுப்புகள்

ABOUT THE AUTHOR

...view details