தமிழ்நாடு

tamil nadu

மணல் குவாரி வழக்கு - மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை கீரனூர் கிராமத்தில் சட்டவிரோத மணல் குவாரியை மூட நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

By

Published : Nov 24, 2021, 5:55 PM IST

Published : Nov 24, 2021, 5:55 PM IST

v
v

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த ஐயப்பன்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அதில், மேலூர் தாலுகா, சுண்ணாம்பூர் கிராமத்தில் மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக தூத்திரி, கீரனூர் பாசன குளங்கள் உள்ளன. ஆனால், தனிநபர் ஒருவர் 3 ஏக்கர் 40 சென்ட் பரப்பளவில் கீரனூர் கிராமத்தில் மணல் குவாரியை நடத்தி வருகிறார்.

எட்டு இடங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் ஆழமாக மணல் எடுக்கப்பட்டு, 800 லாரிகள் மூலமாக வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அதற்கு முறையாக அனுமதியும் பெறப்படவில்லை. இது தொடர்பாக நடவடிக்கை கோரி அலுவலர்களிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே, சட்டவிரோத மணல் குவாரியை மூட உத்தரவிட வேண்டும்" என மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. 2 வாரங்களுக்கு முன்பாக மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்ததாகவும், அதன் அறிக்கையை தாக்கல் செய்ய காலஅவகாசம் வழங்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், மாவட்ட ஆட்சியரும், மேலூர் வட்டாட்சியர் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: Farm Laws: வேளாண் சட்டங்கள் வாபஸ் அறிவிப்பு - ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

ABOUT THE AUTHOR

...view details