சென்னையைச் சேர்ந்த கோவிந்தம்மாள், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 1997 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் நந்தம்பாக்கம் காவல்துறையினரால் எனது மகன் பிரகாஷ்(41)கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் அவருக்கு 2003 ஆம் ஆண்டு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2005 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றமும் தீர்ப்பை உறுதி செய்தது. இதனையடுத்து, கடந்த 18 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். சிறையில் இருந்தபடி பிபிஏ, எம்பிஏ, எம்காம் உள்ளிட்ட படிப்புகளை முடித்து பட்டம் பெற்றுள்ளார்.
தற்போது, எனது மகனின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்து கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே, என் மகனை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும்" என அம்மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், ஜி.இளங்கோவன் அமர்வு, தகுதி, முன்னுரிமை அடிப்படையில் சட்டத்தின்படி மனுதாரரின் கோரிக்கையை உள்துறை(சிறைகள்) செயலர் 8 வாரத்திற்குள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.
18 ஆண்டுகளாக சிறையில் உள்ள வரை விடுவிக்க கோரிய வழக்கு - சிறைத்துறை பரிசீலிக்க உத்தரவு!
மதுரை : 18 ஆண்டுகளாக சிறையில் உள்ளவரை விடுவிக்க கோரிய வழக்கில், சிறைத்துறை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
Case seeking release up to 18 years in prison
இதையும் படிங்க:
முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 892 பேர் மீது வழக்குப்பதிவு!