தமிழ்நாடு

tamil nadu

முறைகேடாக பதிவு செய்யப்பட்ட 88 பட்டாக்களை ரத்து செய்ய கோரிய வழக்கு

தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியில் அரசு நிலத்தை சட்டவிரோதமாக பட்டா போட்டுக் கொடுத்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து பட்டாக்களை ரத்து செய்ய உத்தரவிட கோரிய வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

By

Published : Sep 13, 2021, 10:16 PM IST

Published : Sep 13, 2021, 10:16 PM IST

case-seeking-cancellation-of-88-pattas
case-seeking-cancellation-of-88-pattas

மதுரை : தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த பரமசிவம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் “தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியில் உப்பு தயாரிக்கும் தொழிலை நம்பி பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் இருந்து வருகின்றது.

இந்த பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு பகுதியில் பலர் உப்பளம் அமைத்து தொழில் செய்து வருகின்றனர். இந்த இடங்களை சட்டவிரோதமாக கடந்த பிப்ரவரி மாதம் அப்பகுதி சேர்ந்த ஒரே நபருக்கு 88 பட்டாக்கள் பதிந்து கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்தப்பகுதியில் உப்பளம் அமைத்து இருந்தவர்கள் விரட்டியடிக்கப்படுகின்றனர். எனவே அரசு நிலத்தை சட்டவிரோதமாக பட்டா போட்டுக்கொடுத்த அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து சட்டவிரோதமாக போடப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்” என மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று(செப்.13) நீதிபதிகள் துரைசாமி, முரளி சங்கர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முறைகேடாக பதிவு செய்யப்பட்ட 88 பட்டாக்கள் தற்போது ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பதில் அறிக்கை தாக்கல் செய்தார்.இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க : அண்ணா பல்கலை., ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்

ABOUT THE AUTHOR

...view details