தமிழ்நாடு

tamil nadu

மீனாட்சி அம்மன் கோயில் அருகே கட்டடம் இடிந்து விழுந்து விபத்து!

By

Published : Sep 13, 2019, 9:16 PM IST

மதுரை : மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்கு கோபுரம் அருகே உள்ள பழைய இரண்டடுக்கு கட்டடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துள்ளானது.

மீனாட்சி அம்மன் கோயில்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகில் சையது ராவுத்தர் என்பவருக்குச் சொந்தமான இரண்டடுக்கு வணிக வளாகம் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் மதுரையில் ஸ்மார்ட்சிட்டி பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தப் பணிகள் நடைபெற்று வரும் இடத்திற்கு அருகே உள்ள கட்டடம் என்பதால் கட்டடத்தை அகற்ற வேண்டி மாநகராட்சி சார்பாக 8 மாதங்களுக்கு முன்னதாகவே உத்தரவிடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

மீனாட்சி அம்மன் கோயில் அருகே கட்டடம் இடிந்து விழுந்து விபத்து

இந்நிலையில் அந்த கட்டடம் திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் கட்டடத்தின் முன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சிக்கி கொண்டன. பின்னர் அருகிலிருந்தவர்களால் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details