மதுரை:ஒத்தக்கடையில் இயங்கி வரும் உணவகம் ஒன்றில் இரவில் புகுந்த மர்மநபர்கள் நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், கத்தி மற்றும் உருட்டு கட்டைகளை கொண்டு ஹோட்டலில் காசாளர் ரமேஷ் மற்றும் ஊழியர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் காயமடைந்த ரமேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் குறித்து உணவக உரிமையாளர் ரஹமத்துல்லா மற்றும் காசாளர் ரமேஷ் ஆகியோர் அளித்த புகாரின் அடிப்படையில், ஒத்தக்கடை காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.