தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனிமொழி பணம் கொடுத்தாரா இல்லையானு அவர்கிட்ட கேளுங்க - கடம்பூர் ராஜு

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறப் பணம் கொடுத்தாரா இல்லையா எனக் கனிமொழியிடம் கேளுங்கள் என்று செய்தி தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Kadambur Raju

By

Published : Oct 3, 2019, 9:53 PM IST

மதுரை வந்திருந்த செய்தி தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் இடைத்தேர்தலில் பணத்தை நம்பித்தான் அதிமுக போட்டியிடுகிறது என்று கனிமொழி கூறியது குறித்து கேட்கப்பட்டதற்கு, "யார் அவ்வாறு செய்வார்கள் என மக்களுக்குத் தெரியும். நாடாளுமன்றத் தேர்தலில் கனிமொழி பணம் கொடுத்தாரா இல்லையா என்று அவரிடமே கேட்டாள் நன்றாகத் தெரியும்" என்றார்.

உள்ளாட்சித் தேர்தல் ஏன் மழைக்காலங்களில் அறிவிக்கப்படுகிறது எனச் செய்தியாளர்கள் கேட்தற்கு, "வார்ட் வரையறை உள்ளிட்டவற்றிலிருந்த சிக்கல்கள் அனைத்தும் சரி செய்யப்பட்டதைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் நடத்தத் தயாராகியுள்ளோம். தற்போது மழைக்காலம் என்பதால் தேர்தல் ஒத்திவைக்கப்படாது. ஏனெனில் தேர்தல் ஒருநாள் மட்டுமே அல்லது இரண்டு நாட்கள் நடைபெறும்" என்று கூறினார்.

பேனர் வைக்க அனுமதி கோரி தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தை நாடியுள்ளது குறித்த கேள்விக்கு," சீன அதிபர் வருகின்ற அந்த நிகழ்ச்சி பன்னாட்டு சம்பந்தமான நிகழ்ச்சி என்பதால் பொதுமக்களுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் பேனர்கள் வைக்கவே அனுமதி கோரியுள்ளோம்." என்று தெரிவித்தார்.

கடம்பூர் ராஜு செய்தியாளர்கள் சந்திப்பு

மேலும், தமிழ்நாட்டில் பரவும் டெங்கு காய்ச்சல் குறித்த கேள்விக்கு, எந்த புள்ளி விவரமும் மறைக்கப்படுவதில்லை என்றும், டெங்கு பாதிப்பு தமிழ்நாட்டில்தான் மிகக் குறைவு என்றும் அவர் கூறினார்.


இதையும் படிக்கலாமே: அஜினோமோட்டோவிற்கு விரைவில் தடை?... அமைச்சர் கருப்பணன்

ABOUT THE AUTHOR

...view details