மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னதம்பி . இவர் திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த வேட்டுவபாளையம் பகுதியைச் சேர்ந்த பால்வியாபாரியிடம் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இதேபோல் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரும், அதே நபரிடம் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஆயுதபூஜையை முன்னிட்டு இருவரும் வாகனத்தை தாயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சின்னதம்பி மணிகண்டனை கட்டையால் தாக்கியுள்ளார்.
ஆயுத பூஜை ஏற்பாட்டில் தகராறு - இளைஞர் படுகொலை
திருப்பூர்: ஆயுதபூஜை பராமரிப்பு பணியின்போது பால் வேன் ஓட்டுநர்கள் இருவருக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் கோவத்தின் உச்சத்திற்குச் சென்ற மணிகண்டன், அருகில் இருந்த கத்தியால் சின்னதம்பியை சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த சின்னதம்பி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள மணிகண்டனை தேடி வருகின்றனர்.