தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 15, 2019, 8:35 AM IST

ETV Bharat / state

'இந்தி குறித்த அமித் ஷாவின் பேச்சு ஆபத்தான கூற்று' - மதுரை எம்.பி. சாடல்!

மதுரை : இந்தியை தேசிய மொழியாக்குவது குறித்து உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறியதைவிட ஆபத்தான கூற்று இருக்க முடியாது என மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் சாடியுள்ளார்.

s venkatesan


மதுரை மாவட்டம் மேலூர் பகுதியிலுள்ள 1.5 ஆயிரம் விளைநிலங்கள் பயன்பெறும் வகையில், பெரியார் பாசன கால்வாய் மூலம் தண்ணீர் திறந்துவிடக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்க உறுப்பினர்களுடன் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், மதுரை ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார்.

ஆட்சியரை சந்தித்த சு. வெங்கடேசன்

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சு.வெங்கடேசன், "இன்று இந்தி குறித்து அமித்ஷா கூறிய கருத்துக்கு இந்திய ஒற்றுமைக்கு இதைவிட ஒரு ஆபத்தான கூற்று இருக்க முடியாது.

இந்திய ஒற்றுமை என்பது இந்திய மொழிகளின் சமத்துவத்தில்தான் மையப்புள்ளியாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்திய மொழிகளின் சமத்துவத்தைப் பேணுவதுதான் இந்திய ஒற்றுமையைப் பேணுவதாகும்.

நாடாளுமன்றத்தில் 30 முதல் 40 விழுக்காடு உறுப்பினர்கள் மட்டுமே இந்தி மொழியில் பதவியேற்றனர். ஏறக்குறைய 60 விழுக்காடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தி அல்லாத மொழிகளில்தான் பதவியேற்றனர்.

இந்திய மொழிகளின் சமத்துவத்தையும் இந்திய ஒற்றுமையையும் சீர்குலைக்கிற கருத்தாகவே இதை பார்க்க முடியும். ஆகவே, உள் துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்து கண்டத்திற்குரியது. அவர் தன் கருத்தை வாபஸ் பெறவேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

சு. வெங்கடேசன் செய்தியாளர் சந்திப்பு

இதையடுத்து, ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்தல் நடத்துவது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், "ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு புதிய கல்விக் கொள்கையில் உள்ள நிபந்தனை.

புதிய கல்விக் கொள்கையில் உள்ள நிபந்தனைகளை வரிக்கு வரி அமல்படுத்த தயாராக இருக்கிறது தமிழ்நாடு அரசு என்பதையே இது காட்டுகிறது.

பொதுத்தேர்வு முடிவு வேதனைக்குரியது. சோகமானது. குழந்தைகள், பாடத்திட்டம், கல்விமுறைக்கும் பொதுத்தேர்வு முடிவு ஆபத்தை விளைவிக்கிற செயல்.

ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு முறையை அமல்படுத்தக் கூடாது" என்றார்.

தொடர்ந்து பேனர் விவகாரம் குறித்து பேசிய வெங்கடேசன், "அதிகாரத்தின் குறியீடாகவே பேனர்கள் மாறியிருக்கிறது. அதனால்தான் உயிர்ப்பலி ஆகியிருக்கிறது. நீதிமன்றத்தின் கருத்தை நாங்கள் வரவேற்கிறோம்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details