தமிழ்நாடு

tamil nadu

வெற்று விளம்பர ஆட்சி நடத்தும் அதிமுக கனிமொழி எம்பி குற்றச்சாட்டு

By

Published : Feb 8, 2021, 4:48 PM IST

வெற்று விளம்பர ஆட்சியை அதிமுக நடத்திவருவதாக தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி எம்பி குற்றஞ்சாட்டியுள்ளார்.

AIADMK running a blank advertising regime accues kanimozhi mp
வெற்று விளம்பர ஆட்சி நடத்தும் அதிமுக கனிமொழி எம்பி குற்றச்சாட்டு

மதுரை: 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி மதுரையின் பல்வேறு பகுதிகளில் இன்று (பிப்.8) தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். இதனிடையே, மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அனைத்து சமுதாய சங்க நிர்வாகிகளோடு அவர் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் அனைத்து சமுதாய நிர்வாகிகளின் குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்ற அவர், கூட்டத்தில் பேசுகையில், "தமிழ்நாட்டில் யாருக்கும் கிடைக்காத அமைச்சராக மதுரை மக்களுக்கு விஞ்ஞானி அமைச்சர் கிடைத்துள்ளார். வைகையை தேம்ஸ் ஆக மாற்றுவோம் என்று கூறிவருகின்ற நிலையில் இன்றைக்கு சாயக்கழிவுகள் அனைத்தும் வைகையில் கலந்து வருகின்றன.

வெற்று விளம்பர ஆட்சி நடத்தும் அதிமுக கனிமொழி எம்பி குற்றச்சாட்டு

அரசு திட்டத்தில் செலவிடும் பணம் எங்கு செல்கிறது என்று தெரியாமலே ஆட்சியை நடத்துகின்றனர். மதுரையில் திமுக ஆட்சியில் பாலங்கள் மட்டுமன்றி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தற்போது, கோடிக்கணக்கில் செலவு செய்து செய்தித்தாள்களில் முதல்பக்கத்தில் வெற்றி நடைபோடும் தமிழகம் என்று அதிமுகவினர் விளம்பரம் செய்து வருகின்றனர். வெற்று விளம்பரம் செய்யும் அதிமுக ஆட்சியில், மகளிர் சுய உதவிக்குழு தற்போது எந்த வளர்ச்சியும் இல்லாமல் இருக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சுய உதவி குழுக்கள் மீண்டும் சிறப்பாக செயல்படும், அனைத்து உதவிகளையும் அந்தக்குழுக்களுக்கு செய்வோம் என உறுதியளிக்கிறோம். கால்நடைக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளது, திமுக ஆட்சி வந்தவுடன் நலவாரியம் அமைக்கப்படும். மானிய அடிப்படையில் மாட்டுத்தீவனம் வழங்கப்படும்.

பணமதிப்பிழப்பால் சிறு, குறு தொழில்கள் பல ஆயிரக்கணக்கில் மூடப்பட்டுள்ளன. மீண்டும் தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சியை திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி உருவாக்கும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மதுரை இராசாசி மருத்துவமனையில் ரூ.121 கோடியில் புதிய கட்டடத்திற்கு அடிக்கல்

ABOUT THE AUTHOR

...view details