தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாத்தான்குளம் வழக்கு : ஜாமீன் கேட்டு காவலர்கள் மனு!

மதுரை : சாத்தான்குளம் வழக்கில் காவலர்கள் முருகன், வெயில் முத்து, தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜ் ஆகியோர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்த நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக்கிளை விசாரணையை ஒத்திவைத்தது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை
உயர் நீதிமன்ற மதுரை கிளை

By

Published : Nov 23, 2020, 7:04 PM IST

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் குறித்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட ஒன்பது காவலர்கள் மதுரை மத்திய சிறையில் தற்போது உள்ளனர். இவர்களில், சாத்தான்குளம் காவலர் முருகன், வெயில் முத்து, தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜ் ஆகியோர் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவில், ”சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு தற்போது மதுரை மத்திய சிறையில் நாங்கள் இருக்கிறோம்.உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்படி சிபிசிஐடி காவல் துறையினர் இந்த வழக்கை விசாரித்து, தற்போது சிபிஐ காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே தடய அறிவியல் துறை சிபிஐ அலுவலர்கள் சேகரித்துவிட்ட நிலையில், விசாரணையும் முடிவடைந்துள்ளது. எங்களுக்கு பிணை வழங்கும் பட்சத்தில் நாங்கள் தலைமறைவாக மாட்டோம் என்றும், நீதிமன்றம் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவேன் என்றும் உறுதியளிக்கிறோம். ஆகவே, இந்த வழக்கில் எங்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தனர்.

இந்த வழக்கு இன்று (நவ. 23) நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்குவந்தது. அப்போது, வழக்கு குறித்த விரிவான வாதம் செய்யவேண்டும் என்றும், மூத்த வழக்கறிஞர்கள் வர உள்ளதால் விசாரணைக்கு கால அவகாசம் வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வேண்டுகோள் வைக்கபட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details