தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டின் முன் தூங்கிக் கொண்டிருந்த இளைஞர் கொலை: பின்னணி என்ன?

மதுரை: திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில் இளைஞர் ஒருவர் கழுத்து இறுக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

karuppasamy. annaammal
karuppasamy. annaammal

By

Published : Jun 11, 2020, 9:27 PM IST

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே விளாச்சேரி மொட்ட மலையைச் சேர்ந்தவர் கருப்பையா(42). இவர், நேற்று (ஜூன் 10) இரவு வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில், இன்று விடியற்காலையில் பார்க்கும்போது உயிரிழந்தபடி கிடந்தார். இரவில் தூங்கிக் கொண்டிருந்த கருப்பையா நள்ளிரவில் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர், கருப்பசாமியின் மனைவி பொன்னம்மாளை(32) விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்த கொலையில் திருமணத்தை மீறிய உறவுக்கு ஏதேனும் தொடர்புள்ளதா எனவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

வீட்டின் முன் தூங்கிக் கொண்டிருந்த வாலிபர் கொலை: பின்னணி என்ன?

இது குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், கருப்பையாவுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நாடோடிகள் இனத்தைச் சேர்ந்த இவர் வளையல் வியாபாரம் செய்துவருகிறார். இன்று (ஜூன் 11) அதிகாலையில் இவருடைய மனைவி பொன்னம்மாள் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது கணவன் கழுத்து நெரித்து இறந்ததாக ஆஸ்டின்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது, என்றார்.

முதற்கட்ட விசாரணையில், கருப்பசாமியின் மனைவி பொன்னம்மாளுக்கும், புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் திருமணத்தை மீறிய வகையில் தொடர்பு இருந்ததாகத் தெரிவந்துள்ளது. இந்த விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ள கருப்பசாமியின் மனைவியையும், ஆறுமுகத்தையும் போலீசார் அழைத்துச் சென்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

இதையும் படிங்க: காதல் திருமணம்: வரதட்சணை கேட்ட கணவன் கைது

ABOUT THE AUTHOR

...view details