மதுரை ஜெய்ஹிந்த்புரம் பிரதான சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மைனர் பெண் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றதாக திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய பெண்கள் நல அலுவலர் யோகம்மாள் புகார் அளித்திருந்தார்.
இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரை நகர அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் விசாரணை மேற்கொண்டதில் அந்தப் பெண் மைனர் என்பது உறுதியானது.
பிறகு இதற்கு காரணமான பொன்மேனி சொக்கலிங்க நகரைச் சேர்ந்த மணமகன் வினோத்குமார் (27), அவரது தாயார் ராஜேஸ்வரி (45), ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரைச் சேர்ந்த சுமதி(43) ஆகிய மூவரையும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் 2006இன்படி இரண்டு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.
மதுரை நகர் பகுதியிலேயே மைனர் பெண் ஒருவருக்கு திருமணம் நடத்த முயன்ற சம்பவம் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ஒரே பெண்ணை இருவர் காதலித்ததால் ஏற்பட்ட விபரீதம் : குமாஸ்தா அடித்துக் கொலை