தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 24, 2023, 6:09 PM IST

Updated : Apr 24, 2023, 7:52 PM IST

ETV Bharat / state

12 மணி நேர வேலைத் திட்டத்தால் தொழில் உற்பத்தி பெருகும் - தமிழிசை சௌந்தரராஜன்

தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ள 12 மணி நேர வேலைத் திட்டம் காரணமாக தொழில் உற்பத்தி பெருகும் என தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

Etv Bharat
Etv Bharat

12 மணி நேர வேலைத் திட்டத்தால் தொழில் உற்பத்தி பெருகும் - தமிழிசை சௌந்தரராஜன்

மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வருகை புரிந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''G ஸ்கொயர் நிறுவனத்தில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனை குறித்து நான் கருத்துக்கூற விரும்பவில்லை. நான் பாஜக தலைவராக இருந்தபோது அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களிடமும் மரியாதையுடன் நடந்திருக்கிறேன்.

அனைத்துக் கட்சியினருக்கும் கருத்துக் கூற உரிமையுண்டு. அதன் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவரது கருத்தை தெரிவித்து இருக்கிறார். பாஜக கட்சி குறித்து, தற்போதைய தலைவர்களிடம் கேளுங்கள். என்னை இதில் இழுத்துவிடாதீர்கள்.

12 மணி நேர தொழிலாளர் திருத்தச் சட்டத்தை தொழிலாளர்களிடம் விட்டுவிடுங்கள். அதனை அரசியலாக்க வேண்டாம். நான் மருத்துவராக இதில் ஓர் கருத்து கூறுகிறேன். 4 நாட்கள் பணி, 3 நாட்கள் விடுமுறை இருந்தால் தொழில் உற்பத்தி அதிகரிக்கும் என ஆய்வு முடிவுகள் வந்துள்ளன.

கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இது நடைமுறையில் உள்ளது. கோடை வெயில் அதிகரித்து இருப்பதால், நீர்ச் சத்துள்ள உணவுகளை பொதுமக்கள் அதிகம் உட்கொள்ள வேண்டும்'' என்றார்.

இதையும் படிங்க: ‘கோடநாடு கொலை வழக்கு சிந்துபாத் கதை போல தொடரும்’ - எடப்பாடி பழனிசாமி!

Last Updated : Apr 24, 2023, 7:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details